அழகியவள்

அழகியவள் என்னுடலைத் தழுவியவள் என்னுடனே

பழகியவள் மோனமொழி எழுதியவள் நன்னெறியில்

ஒழுகியவள் குறைகள்தமைக் கழுவியவள் தண்ணிலவின்

குளுமையவள் நிறைகுடத்தின் முழுமையவள் தீந்தமிழின்

பழமையவள் இனிமையிலே மழலையவள் அழகினிலே

ஈழமவள் இசையினிலே யாழவ ளே போதனையில்

கிழவியவள் குறும்பினிலே குழவியவள் ஆழத்தில்

ஆழியவள் சொர்க்கத்தின் வழியவளே கலைமானின்

விழியவளே தியாகத்தில் வாழையவள் ஈதலிலே

மழையவளே அன்பினிலே முழுகியவள் எங்கேயோ

ஒழிந்து விட்டாள் இதயத்தைப் பிழிந்து விட்டாள்

 

27.05.1979 ஈழநாடு

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய