கோழிச் சேவல்

கொக்கர கொக்கர
கொக்கரக் கோ
கோழிச் சேவல் நான்
கொக்கரக் கோ

காலை மலர்ந்தது
கொக்கரக் கோ
கண்ணை விழித்தெழும்
கொக்கரக் கோ

இருள் அகன்றது
கொக்கரக் கோ
இனிய பகலாச்சு
கொக்கரக் கோ

கோயில் மணிகேட்கக்
கொக்கரக் கோ
கும்பிடப் போவீரோ
கொக்கரக் கோ

பள்ளிப் பிள்ளையரே
கொக்கரக் கோ
பாடம் படித்திடக்
கொக்கரக் கோ

பாடசாலை செல்வீர்
கொக்கரக் கோ
பண்பாய் வளருவீர்
கொக்கரக் கோ

முரசொலி 02.07.1989

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய